ஜிமெயில், "Undo Send" என்ற ஒரு புதிய வசதியை அளிக்கிறது. அதாவது, நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை,  மெயில் பெறுபவர் இன்பாக்ஸிக்குச் செல்லாமலேயே தடுத்திடலாம்.  

மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும்.  நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send, Undo" என்ற இணைப்பு வரும்.  மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.



இந்த சேவையை பயன்படுத்த,  ஜிமெயிலில் உள்நுழைந்து, "Labs" பக்கத்திற்குச் சென்று,  "Undo Send" சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும்.  (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில்,  பயனர் பெயர், "Setting" இடையில்,  பச்சை  நிற குடுவை  ஒன்று இருக்கும்.  அதுவே, "Labs" பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.)

மின்னஞ்சல்,  பெறுநர் இன்பாக்ஸிக்குச் சென்றுவிட்டால்,  அதை  திரும்பப் பெற இயலாது. 

கணினி வைரஸ், ட்ரோஜன் போன்றவைகளால் பாதிக்கப்படும் போது,  கணினியின் இயங்கு தளத்தை (operating system) மறுமுறை நிறுவ (install) வேண்டியதிருக்கும். 

கணினி வைத்திருப்போர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில், Windows XP நிறுவும் முறையும் ஒன்று.   தெரியாதவர்கள் முந்தய பதிவைப்  படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  பலருக்கும் Windows XP நிறுவும் வழிமுறை  தெரிந்திருக்கும்.  இருப்பினும், கணினியை  பார்மட் (format) செய்து மறுமுறை நிறுவும் போது,  தகவல்கள் அழிந்து விடுமோ,  கணினி செயலிழந்து போய் விடுமோ என்ற பயம் இருக்கும். 

கணினி வைத்திருப்போருக்கும்,  ஹார்ட்வேர் தொழிலில் இருக்கும் புதியவர்களுக்கும் "Windows XP setup Simulator" என்ற அருமையான,  பயனுள்ள மென்பொருள் உள்ளது.   ஒரு கணினியை பார்மட் செய்து, windows xp-ஐ நிறுவும் போது எப்படி கணினி செயல்படுமோ,  அதே அமைப்பை இந்த மென்பொருள் ஏற்படுத்தித் தரும்.  ஆகையால், எந்த வித பயமும் இன்றி, நீங்கள் நன்றாக பயிற்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும்  விண்டோஸை நிறுவுலாம், நீக்கலாம்.
 
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய, http://getitfreely.co.cc/xp செல்லவும்.

குறிப்பு:  ESC கீயைத் தட்டி எப்போது வேண்டுமானாலும்,  இந்த மென்பொருளில் இருந்து வெளியேறலாம்.  இதனால் கணினிக்கு எந்த பாதிப்பும் வராது.